சண்டிகர்: பஞ்சாபில் கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி குருத்வாராவில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த சீக்கிய ஆர்வலர் குர்பிரீத் சிங் ஹரி நவ் மர்மநபர்களின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். இவர் பஞ்சாப் மாநிலம் கதூர் தொகுதி எம்பியான அமிர்தபால் சிங்கின் தலைமையிலான வாரிஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பின் உறுப்பினராக இருந்தார். அமிர்தபால் சிங்கிற்கு எதிராக வெளிப்படையாக பேசினார். இந்நிலையில் கதூர் எம்பி அமிர்தபால் சிங்கின் உத்தரவின்பேரில் தான் குர்பிரீத் சிங் கொல்லப்பட்டதாக சந்தேகம் எழுந்தது. எம்பி அமிர்தபால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விவரங்களை டேட்டிங் ஆப்பான டிண்டரிடம் இருந்து பஞ்சாப் காவல்துறை கோரியுள்ளது.
சீக்கியர் கொலை வழக்கு பஞ்சாப் எம்பியை சந்தேகிக்கும் போலீஸ்
0
previous post