ஆவடி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கு இணங்க திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நீட் தேர்விணை ரத்து செய்திட ஒன்றிய அரசினை வலியுறுத்தி, திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி, மாணவர் அணி சார்பில் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நீட் விலக்கு நம் இலக்கு என்ற மாபெரும் கையெழுத்து இயக்கம் ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.சுரேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடுகுத்தகை கே.ஜெ.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, சா.மு.நாசர் பேசுகையில், மாநில அரசுகளிடம் இருந்து செலவுகளுக்கான பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு அளிக்க வேண்டிய மானியங்களை வழங்காமல் நீட் போன்ற திட்டங்களை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்துகிறது என்றால் நாம் ஏமாளிகளாகிவிடுவோம்.
அகில இந்தியாவில் சிறப்பான மருத்துவ வசதி கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு. திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை பெற வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயக்குமார், மாவட்ட அவைத் தலைவர் ராஜி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சீனிவாசன், ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், ராஜேந்திரன், விமல்வர்ஷன், வி.குமார், மகாதேவன், மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், பகுதிச் செயலாளர்கள் நாராயணன், பொன்.விஜயன், பேபிசேகர்,
ஒன்றிய நகர பகுதிச் செயலாளர்கள் தேசிங்கு, ஜெயசீலன், புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், மூர்த்தி, கமலேஷ், பிரேம் ஆனந்த், திருமலை, தங்கம் முரளி, முனுசாமி, தி.வை.ரவி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செந்தாமரை, கருணாநிதி, உமாமகேஸ்வரன், அக்னி ராஜேஷ், பிரியாகுமார், மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் புருஷோத்தமன், விக்டர் மோகன், சந்தோஷ் ராஜ், சரத்குமார், மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் விஜயலட்சுமி, சுரேஷ்கிருஷ்ணன், சிவா, சங்கீதா, பவுல், தமிழ்செல்வி, வினோத், நாகூர்கணி, பொறியாளர் மோகன்,
ரவி, ஜாக்கப், சவுந்தரராஜன், இளையான், பிரவீன்குமார், விமல், குமரேசன், தணிகாசலம், சண்முகம், குமரேசன், ஷாஜகான், பார்த்திபன், நிஜலிங்கம், ஆதிகேசவன், யோகா, திராவிட தேவன், கௌரி கஜேந்திரன், கஜலட்சுமி, லட்சுமி, உதயா, பேபிஸ்ரீ உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் துர்கா பிரசாந்த், தியாகராஜன், ராஜேஷ் குமார் ஆகியோர் நன்றி கூறினார்கள்.