பெங்களூரு: மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கீடு பெற்றதில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதி அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில் இப்புகாரில் பண பரிமாற்றம் நடந்துள்ளதற்கான முகாந்திரம் இருப்பதாக அமலாக்க இயக்குனரகம் முடிவு செய்து, முதல்வர் சித்தராமையா உள்பட 92 பேரின் பெயரில் பதிவாகி இருக்கும் அசையா சொத்துக்களை முடக்கி வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள 160 வீட்டுமனைகள் அமலாக்கத் துறையால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.