பூந்தமல்லி: வானகரம், பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். ஓய்வு பெற்ற எஸ்ஐ. இவரது மனைவி மல்லிகா, வீட்டின் முன்பு நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் மல்லிகாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது போரூர் பகுதியை சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இதுபோல் வேறு எந்தெந்த இடங்களில் செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.