மதுரை : நாளை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் சாதியை குறிக்கும் டீ சர்ட் அணிய தடை விதித்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சாதியை குறிக்கும் விதத்தில் தலையில் ரிப்பனும் கட்டிச் செல்லக் கூடாது என்று உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்துவதை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.