புதுடெல்லி: சுசுருக்கு மடி வலைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,\”தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும், அதேப்போன்று கடலில் 12 நாட்டிக்கல் மையிலுக்கு அப்பால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மீன்பிடிக்க 8 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழக மீனவர்கள் சுருக்கு மடி வலையை பயன்படுத்தலாம் என்றும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து முந்தைய உத்தரவை மறு பரிசீலனை செய்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபஸ்-எஸ்-ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், தற்போது எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
வேண்டுமானால் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் விவகாரத்தில் புதியதாக மனுவை தாக்கல் செய்தால், அதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.