வரகு,
சாமை,
குதிரைவாலி,
கொள்ளு,
தினை,
வெள்ளை சோளம்,
மஞ்சள் சோளம், கம்பு – தலா 1 தேக்கரண்டி
கோதுமை பிரெட் – 8 துண்டுகள்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 4 பல்
கொத்துமல்லித்தழை – முக்கால் கப்
வெண்ணெய் – 8 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
சிறுதானிய கலவையை 3 மணி நேரம் ஊற வைத்து, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்துமல்லி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பின்னர், இந்தக் கலவையை பிரெட்டின் ஒருபுறம் அரை அங்குல கனத்துக்குச் சீராகத் தடவி மற்றொரு பிரெட் துண்டத்தால் மூடி தோசைக் கல்லில் சிறிது வெண்ணெய் சேர்த்து ரோஸ்ட் செய்யவும். தக்காளி சாஸுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.