பெரம்பூர்: கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்த சோபன் யாதவ் (30), கொசப்பேட்டை மார்க்கெட் புது தெருவில் பானி பூரி மற்றும் சாண்ட்விச் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், நள்ளிரவில் இவரது கடை பூட்டை உடைத்த 4 மர்ம நபர்கள், உள்ளே சென்று திருடிக் கொண்டு இருந்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், திருட்டில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஓட்டேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தப்பி ஓடிய புரசைவாக்கம் சாலைமா நகரை சேர்ந்த ரஞ்சித் (எ) சுண்டு (19) மற்றும் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கடையை உடைத்து திருட்டு 3 சிறுவர்கள் பிடிபட்டனர்
previous post