கொல்லூர்: கர்நாடகாவில் ஷூட்டிங் முடித்து திரும்பிய மினி பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 6 துணை நடிகர்கள் காயமடைந்தனர். கர்நாடகா மாநிலம் கொல்லூர் பகுதியில் திரைப்பட இயக்குனர் ரிஷாப் ஷெட்டி இயக்கிய மற்றும் நடித்த காந்தாரா – சேப்டர் 1 திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. அந்த படத்தில் நடிக்கும் துணை நடிகர்களை அழைத்து செல்வதற்காக, மினி பேருந்து ஒன்று ஜட்கால் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்து திரும்பி சென்று கொண்டிருந்த மினி பஸ், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். மீதமுள்ள 14 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:
படப்பிடிப்பு முடிந்ததும் முடூரிலிருந்து கொல்லூர் நோக்கி படக்குழுவினர் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்து நடந்துள்ளது. படுகாயமடைந்த ஆறு பேரும் சிகிச்சைக்காக கொல்லூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறினர்.