இந்திய காலணி வடிவமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் (Foot Design and Development Institute) காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Junior Faculty: 1 இடம். சம்பளம்: ரூ.45,000. வயது: 35க்குள். தகுதி: பேஷன் டிசைன்/ கிராபிக் டிசைன்/ அப்பரல் டிசைன்/ கம்யூனிகேஜன் டிசைன்/பேஷன் டெக்னாலஜி/ டெக்ஸ்டைல் மற்றும் குளோதிங்/நிட்வேர் டிசைன்/லெதர் டிசைன்/ டெக்ஸ்டைல் டிசைன் பிரிவில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
2. லேப் அசிஸ்டென்ட்: 1 இடம். சம்பளம்: ரூ.25,000. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவமும், காலணி தயாரிப்பில் 6 மாத கோர்ஸ் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும் அல்லது டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்/டெக்ஸ்டைல் டிசைன் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. ஜூனியர் லேப் அசிஸ்டென்ட்: 1 இடம்.
சம்பளம்: ரூ.22,000. வயது: 35க்குள்.
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் காலணி தயாரிப்பில 6 மாத கோர்ஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்/டெக்ஸ்டைல் டிசைன் பிரிவில் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
4. உதவி மேலாளர்: 3 இடங்கள். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.40,000. தகுதி: எம்பிஏ/ மேலாண்மை பாடத்தில் முதுநிலை டிப்ளமோ படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
https://www.fddiindia.com/career.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.05.2025.