திருப்புவனம் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா குறித்து திடுக்கிடும் தகவல்! வெளியானது. ஏற்கனவே நிகிதா மீது அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, திருமண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. 6 மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தவர் நிகிதா. திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் நிகிதா இன்று விசாரணைக்கு ஆஜராவார் என தகவல் வெளியானது. அஜித்குமார் மரணம் பெரும் வருத்தம் அளிப்பதாகவும், தனக்கு எந்த அதிகாரியையும் தெரியாது எனவும் நிகிதா விளக்கம் அளித்துள்ளார்.