புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த சம்பவத்தில் கல்லூரி மாணவியின் காதலன் சிலம்பரசன் கைது. நர்சிங் மாணவி தனக்குத் தானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்து வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி புதைத்துள்ளார். புதைக்கப்பட்ட இடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்ட அவ்வழியே சென்ற பெண், உடனடியாக குழியைத் தோண்டி உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.