டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமரின் கதையில் நடித்த வங்கதேச நடிகை நுஸ்ரத் தாய்லாந்து தப்பி செல்ல முயன்ற போது அதிரடியாக கைது செய்யப்பட்டார். பிரபல வங்கதேச நடிகை நுஸ்ரத் பரியா (31), முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘முஜிப்: தி மேக்கிங் ஆஃப் எ நேஷன்’ என்ற படத்தில் அவரது கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் ஆவார். இந்த நிலையில் அவர் டாக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். முன்னதாக கடந்தாண்டு 2024 ஜூலை மாதம் நடந்த வங்கதேச அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது டாக்காவின் வட்டாரா பகுதியில் மாணவர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாக நுஸ்ரத் பரியா மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் அவர் தாய்லாந்து செல்ல முயன்றபோது விமான நிலைய குடியேற்ற சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார்.
ஷேக் ஹசினா வேடத்தில் நடித்த வங்கதேச நடிகை கைது
0