லடாக்: வீடியோ காட்சி ஒன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, பாரத மாதாவின் புகழை எதிரொலித்த லடாக் என ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார். லடாக்கில் உள்ள ராகுல்காந்தி, அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன் லடாக்கில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடினார். அதனை தொடர்ந்து லேவில் இருந்து கிழக்கு லடாக்கில் உள்ள பேங்காங் சோ ஏரிக்கு ராகுல் காந்தி பைக் ரைடு செய்துள்ளார்.
அதன் புகைப்படங்களை ராகுல் காந்தி தனது சமூகவலைதளத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தநிலையில், தற்போது லடாக்கில் உள்ள ராகுல்காந்தி, அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இது குறித்து வீடியோ காட்சி ஒன்றை ராகுல்காந்தி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் பாரத மாதாவின் புகழை எதிரொலித்த லடாக் எனக் கூறியுள்ளார்.