சென்னை: சமூக வலைதளங்களில் பொருளாதாரம், முதலீடு குறித்து சரியான தகவல்களை பகிர வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் வருமான வரி செலுத்துவோர் குறித்துதான் முதலில் ஆலோசிப்போம். வருமான வரி செலுத்துவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறோம். அரசுக்கு வருவாய் ஈட்டுவது குறித்த திட்டங்களைக் கூட பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் கடைசியாகத்தான் ஆலோசிக்கிறோம். எனவும் கூறினார்.