சென்னை: இலங்கைக்கு அனுப்பக்கோரி சாந்தன் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. விடுதலைக்குப் பின் கடந்த 10 மாதங்களாக முகாமில் அடைத்து வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என அவர் மனு தாக்கல் செய்திருந்தார். நோய்வாய்ப்பட்டுள்ள வயது முதிர்ந்த தாயாரை கவனிக்க இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கோரி சாந்தன் மனு அளித்திருந்தார்.