கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சனிப்பிரதோச வழிபாடு நடைபெற்றது. தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மஹா சனிப்பிரதோச வழிபாடு நடந்தது. இதையொட்டி காலையில் நடைதிறக்கப்பட்டு காளசந்தி பூஜை, விளா பூஜை, சுப்பிரமணிய பூஜை நடைபெற்றது. மாலை 5மணிக்கு மேல் அகிலாண்டேஸ்வரி, சிவபெருமான் சன்னதிக்கு முன்புள்ள நந்தீஸ்வரருக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால், மஞ்சள், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு அபிசேஷங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த சிறப்பு அபிசேஷ பூஜையில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் மாடசாமி, பிரதோஷ குழு தலைவர் முருகன், பௌர்ணமி குழு தலைவர் மாரியப்பன், கோயில் ஊழியர்கள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.