சென்னை: கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் பெண் மென்பொறியாளர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். கரூர் ரயில் நிலையத்தில் ஏறி விரைவு ரயிலில் வந்தபோது காட்பாடி அருகே 2 பேர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்துள்ளார். பெண் மென்பொறியாளர் அளித்த புகாரின்பேரில் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.