சென்னை: பாலியல் புகார் உறுதியானால் திரைத்துறையில் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதிக்க பரிந்துரை செய்ய தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நடிகர் சங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.