சென்னை: கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியில் உள்ள வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் உதவி கமிஷனர் யாஸ்மின் உத்தரவின்பேரில் விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பந்தபட்ட பகுதியில் நேற்று முன்தினம் அந்த வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தபோது வடபழனி பகுதியை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கர் நாராயணன் (45) என்பவர் தனது தோழியான திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த துர்காதேவி (32) உடன் இணைந்து இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பட்டதாரி இளம்பெண்கள் 2 பேர் மீட்கப்பட்டனர். மேலும் வாடிக்கையாளர்களை பிடிக்க பயன்படுத்திய 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.