கொல்கத்தா :பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் இறந்தால் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியது.