சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் கைது செய்தனர். ஆவடியில் 35 வயதுள்ள வடமாநில வாலிபர், கட்டுமான வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது 3 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ரவி (60) என்ற கூலித் தொழிலாளி குழந்தைக்கு சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமியின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை மீட்டனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆவடி போலீசார் ரவியை பிடித்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். ஆவடி மகளிர் போலீசார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.