சேலம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி இறந்த சிவராமனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சேலம் அரசு மருத்துவனையில் பிரேதப் பரிசோதனை முடிந்ததை அடுத்து சிவராமனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. சிவராமனின் தந்தை உடலும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டது. சேலத்தில் இருந்து சிவராமனின் உடல் சொந்த ஊருக்கு அமரர் ஊர்தி மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.