டெல்லி: பாலியல் குற்றச்சாட்டில் டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் எனவும் அனுராக் தாக்கூர் உறுதி அளித்தார். விவசாய சங்கங்கள் கோரிக்கையை ஏற்று கங்கையில் பதக்கத்தை வீசும் முடிவை வீரர்கள் திரும்ப பெற்றனர். 5 நாளில் நடவடிக்கை எடுக்காவிட்டால் முற்றுகை என விவசாய சங்கங்கள் எச்சரித்த நிலையில் அறிவித்துள்ளனர்.