தையல் இயந்திரம் எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருள். அதனை முறையாக பராமரிப்பது அவசியம்.
*தையல் இயந்திரம் தொடர்ந்து உபயோகித்தல் மிகவும் நல்லது. முடியாத போது 15-20 நாட்களுக்கு ஒருமுறை துடைத்து, பெடல் செய்தால் நீண்ட காலம் உழைக்கும்.
*தடிமனான துணிகளை தைப்பதற்கு முன்பாக இயந்திரத்திலுள்ள ஊசியில் சோப் அல்லது மெழுகு தடவினால் ஊசி உடையாது.
*தையல் மெஷின் பெல்ட் கூடுதல் நீளமாக இருந்தால், குளிர்ந்த நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் வெயிலில் காயவைத்தால் சரியாகிவிடும்.
*ஊசியில் நூல் கோர்க்க, நூலின் நுனியை சோப், மெழுகு தடவி கோர்த்தால் எளிதாக இருக்கும்.
*ஆடைகளில் ஜிப் வைத்து தைப்பதற்கு முன் செல்லோடேப் கொண்டு ஒட்டிவிட்டு தைத்தால் தையல் நேராக வரும்.
*பாபின் துருப்பிடிக்காமல் இருக்க உள், வெளிப் பக்கமும் லேசாக நெயில் பாலீஷ் தடவலாம். நூல் சிக்காமல் இருக்கும்.
*உப்பு காகிதத்தை கத்திரிக்கோலால் பலமுறை வெட்டினால் மழுங்கிய கத்திரி கூர்மையாகும்.
*தையல் பொருட்கள் வைக்கும் பெட்டியில் சிறிய காந்தத் துண்டு வைத்தால் ஊசி, ஊக்கு தரை அல்லது சோபாவில் விழுந்தால் எடுக்க சுலபமாக இருக்கும்.
*இயந்திரத்திற்கு எண்ணெய் போடுவதற்கு முன் நூல் அழுக்குகளை பெயின்ட் பிரெஷ்ஷால் எடுத்த பின்புதான் போட வேண்டும்.
*எண்ணெய் போட்ட பின், உடனே நல்ல துணிகளை தைக்காமல், ஒரு பழைய துணியில் ஓட்டி பார்த்துவிட்டு தைப்பது நல்லது.
*உபயோகப்படுத்தாத போது மெஷினை மூடி வைத்தால் நீண்ட நாள் உழைக்கும்.
– சீனு சந்திரா, சென்னை.