சென்னை: 5நாட்களுக்கும் மேல் கடுமையாக காய்ச்சல் இருந்தால் கட்டாயம் எலிசா பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ககந்தீப் சிங் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் போதிய ரத்த இருப்பை உறுதி செய்ய வேண்டும். ரத்த தான முகாம்கள் நடத்தி தேவையான ரத்த இருப்பை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் வலியுறுத்தியுள்ளார்.