சென்னை: அதிமுக ஆட்சியில் சாலை போடாமல் ரூ.1.98 கோடி அரசு நிதி அளித்துள்ளதால், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: அதிமுக ஆட்சியில் கோவையில் போடாத 16 ரோடுகளுக்கு ரூ.1.98 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வரும் செய்திகளை விசாரித்து, ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் மீது முதலமைச்சர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையில் பல ஆண்டுகளாக பழுதாக இருந்த சாலைகளை புதுப்பிக்க நிதி ஒதுக்கிய பின் அந்த நிதியைக்கொண்டு வேறு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த முறைகேடு அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அதனை மாவட்ட ஆட்சியரும் உறுதி செய்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்தோர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.