சென்னை: போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
நாளை மறுநாள் சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வர் என்பதால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம்உள்ளிட்ட இடங்களுக்கு நாளை (புதன்கிழமை) 470 பேருந்துகளும், வரும் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 17ம் தேதி (சனிக்கிழமை) 365 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு நாளை 70 பேருந்துகளும் வரும் 16ம் தேதி மற்றும் 17ம் தேதி 65 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.