சென்னை: சென்னை பெருநகர காவல்துறையில் கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 12ம் ேததி முதல் 18ம் தேதி வரையிலான நாட்களில் கொலை குற்றவாளிகளான ரவுடிகள் உட்பட 26 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஜெ.ஜெ.நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பெரம்பூர் ரமணா நகரை சேர்ந்த யோகேஷ்(25), எம்.கே.பி.நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நீலாங்கரையை சேர்ந்த சுரேஷ்(34), பாலியல் வழக்கில் தொடர்புடைய மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(எ)அப்பு(24), பழவந்தாங்கல் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்த கண்ணன்(எ)கமலக்கண்ணன்(35), ஆன்லைன் மூலம் பணம் மோசடியில் ஈடுபட்ட திருவொற்றியூர் பகுதியை சேர்நத் சதீஷ்குமார்(33), சதீஷ்(26), வில்லிவாக்கம் பகுதியில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மஞ்சுநாதா(24), திருமங்கலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட் அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த ஹரி(எ)ஹரிகரன்(22), பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த சந்துரு(எ)அப்பு(21), நீலாங்கரை பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட திருவான்மியூர் பகுதியை சேர்ந்த அஜய்(22).
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நெற்குன்றம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(48), பழவந்தாங்கல் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆதம்பாக்கத்தை சேர்ந்த விமல்ராஜ்(28), வேளச்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை ெசய்த பாரதி நகர் பகுதியை சேர்நத் சூர்யா(25), வேளச்சேரி பகுதியை சேர்ந்த உதயகுமார்(27), துரைப்பாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பெருங்குடியை சேர்ந்த கோட்டீஸ்வரன்(எ)கோட்டி(36), அமைந்தகரை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித்(29), எர்ணாவூர் பகுதியை சேர்ந்த வினோத்(27), வளசரவாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட போரூர் பகுதியை சேர்ந்த ராஜ்பாத்(எ)ராஜ்(27), திருமங்கலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட கார்த்திகேயன்(22).
திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக பல்லவன் சாலையை சேர்ந்த ஜோபாய்(எ)ஜோசப்(47), வழிப்பறியில் ஈடுபட் புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார்(24), அயனாவரம் பகுதியில் ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை ேசர்ந்த சிவா(21), தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கார்த்திக்(25), செங்குன்றம் பகுதியை சேர்ந்த ஜோசப்(எ)தினேஷ்(25), எண்ணூர் பகுதியை சேர்ந்த அப்துல் கரீம்(25) என மொத்தம் 26 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.