சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையால் நெரிசல்மிகு மாலை நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை, நாளை மறுநாள் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை, நாளை மறுநாள் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை 2 வழித்தடங்களிலும் 6 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.