திண்டுக்கல்: தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் கடந்த 3 மணி நேரத்துக்கு மேலாக பங்க்குகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் கடந்த 3 நாட்களாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 3 பெட்ரோல் பங்க்குகள் உள்ள நிலையில் ஒரு பெட்ரோல் பங்க்கில் டீசல் மட்டுமே உள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.