சென்னை: மெட்ராஸ் ஐ” பரவல் பற்றின ஆய்வும்,கட்டுப்படுத்தவும்,விழிப்புணர்வு ஏற்படுத்தவும் எழும்பூர் மண்டல அரசு கண் மருத்துவமனையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. செப் 16 முதல் 25 வரை கண் பரிசோதனை நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கண்நோய் காரணமாக 240 பேருக்கு எழும்பூர் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெட்ராஸ் ஐ பரவல் சென்னையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ பாதித்தலே குடும்பம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளது. மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் அரசால் அங்கிகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் 12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படவுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகள், அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் பரிசோதனை நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். மெட்ராஸ் ஐ பாதிப்புக்குள்ளானவர்களிடமிருந்து எப்படி விலகி இருக்க வேண்டும் என்று விதிமுறைகளை தெரிவித்துள்ளார். கண் நோய் பாதித்தவர்கள் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் எப்படி உபயோக படுத்தக்கூடாது போன்ற விழிப்புணர்வையும் இந்த மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் 10 நாட்களுக்கு தொடர் ஆய்வு, சிகிச்சை, கண்காணிப்பு, விழிப்புணர்வு என்கின்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற 16-ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை 10 நாட்கள் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வகையான பள்ளி மாணவர்களுக்கும் கண் பரிசோதித்து அவர்களை பாதுக்காக்கும் வகையில் மகத்தான திட்டங்களை அரசு முன் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் மட்டும் 1,46,957 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 1,46,957 பேருக்கு கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
தானங்களில் கண்தானம் விழிப்புணர்வு பெற்ற தானம் ஆகும் உறுப்பு மாற்று தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் வகித்து வருகிறது. அந்த வகையில் ஏற்படுத்தபட்ட விழிப்புணர்வு என்கின்ற வகையில் இன்றைக்கு 3702 பேர் தமிழ்நாடு முழுவதிலும் தங்களது கருவிழிகளை தானமாக கொடுத்துள்ளனர். கண்தானம் செய்துள்ள 3702 பேருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.