ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலத்திருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் நிலவை நெருங்கியது என்று இஸ்ரோ தகவல் அளித்துள்ளது. “டீ பூஸ்டிங்” முறையில் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்படுகிறது. சற்றுநேரத்தில் நிலவுக்கு 100 கி.மீ. நெருக்கத்தில் லேண்டர் கொண்டு செல்லப்படும். ஆக. 23 ஆம் தேதி லேண்டரை நிலவில் இறக்க இந்திய விண்வெளி மையம் முடிவு செய்துள்ளது. லேண்டர் கீழே உள்ள 4 ராக்கெட்டுகள் எரிக்கப்பட்டு லேண்டர் கீழே இறக்கப்படும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.