டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, ஜார்ஜ் மஸி அமர்வு விசாரித்தது. அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நேற்று முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி செந்தில், பாலாஜி கைது செய்யப்பட்டார்.