புதுடெல்லி: செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா தமைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேட்கும் அனைத்து விவரங்களையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உங்களது நடவடிக்கை வெறும் சொல் அளவில் மட்டும் தான் உள்ளது. நீங்கள் செய்யும் செயலுக்கு உங்களை பாராட்டவா முடியும் என்று கேள்வியெழுப்பினார். இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர், செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கை கால தாமதம் செய்யும் விதமாக சுமார் எட்டு முறை அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது என்று தெரிவித்தார். இதைதொடர்ந்து விசாரணை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைக்கப் பட்டது.