டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை ஆக.20-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜாமின் மனு விசாரணை முடிந்து இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.