சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணை அக்.31ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது . போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீது கடந்த மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.