புதுடெல்லி: போக்குவரத்து துறையில் பணியமர்த்த பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளு படி செய்தது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையிட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர், தற்போது அவருக்கு இருக்கும் இதய குழாய் அடைப்புக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என்றால் அவருக்கு ஆபத்தாக முடியும். குறிப்பாக பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அமலாக்கத்துறை வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை 28ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.