புதுடெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளபோது, அதே விவகாரத்தில் அமலாக்கத்துறை தனியாக வழக்கு தொடர முடியுமா?. அது சட்ட விதிகளுக்கு உட்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.