Thursday, February 22, 2024
Home » முதன்மை அமர்வு கோர்ட்டில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி

முதன்மை அமர்வு கோர்ட்டில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி

by Ranjith

சென்னை: அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்திருந்த நிலையில், மூன்றாவது முறையாக ஜாமீன் கோரினார்.

அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு கடந்த 8ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனு மீதான தீர்ப்பு 12ம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் மனு மீது நீதிபதி அல்லி நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 3வது முறையாக அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

five × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi