புதுடெல்லி: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என கடந்த ஜூன் 16ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து அதற்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழ க்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தது.
இதையடுத்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது மற்றும் அதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.