டெல்லி: செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியுமா? என்று ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில போலீஸ் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளபோது ED வழக்கு போட முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், அமலாக்கத்துறை 12ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.