மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 359 புள்ளிகள் உயர்ந்து 82,725 புள்ளிகள் என்ற உச்சத்தை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 97 புள்ளிகள் உயர்ந்து 25,333 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. பஜாஜ் பின்செர்வ் பங்கு 3.9%, பஜாஜ் பைனான்ஸ் 2.9%, ஹெச்சிஎல் டெக் 2.4%, ஐடிசி 1.9% பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகிறது. டெக் மகிந்திரா, அலட்ரா டெக் சிமென்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனிலீவர் பங்குகளும் விலை உயர்ந்துள்ளது. டாடா மோட்டார்ஸ், மகிந்திரா & மகிந்திரா, பார்த்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.