மும்பை: தொடக்க நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 75,939 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்து. காலையில் 344 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் பிற்பகல் 699 புள்ளி சரிந்து இறுதியில் சற்று மீண்டு 200 புள்ளிகள் குறைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 102 புள்ளிகள் சரிந்து 22,929 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.