மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்றத்துடன் இருந்த பங்குச்சந்தை 1,3% என்ற உச்சத்தில் இருந்து சரிந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 239 புள்ளிகள் உயர்ந்து 77,578 புள்ளிகளானது. நண்பகல் வர்த்தகத்தில் 1,112 புள்ளிகள் வரை அதிகரித்த சென்செக்ஸ் இறுதிநேரத்தில் சரிந்து 239 புள்ளிகளில் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 17 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 23,578 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. நண்பகல் வர்த்தகத்தில் 327 புள்ளிகள் உயர்ந்த நிஃப்டி, இறுதியில் உச்சத்தில் இருந்து இறங்கி 65 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
1112 என்ற உச்சத்திலிருந்து 239க்கு வந்த சென்செக்ஸ்..!!
0
previous post