தேவையான பொருட்கள்
250 கிராம் சேனைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது)
2 பெரிய வெங்காயம்
1/4 கப் தேங்காய் துருவல்
3 பச்சை மிளகாய்
ஒரு கொத்து கறிவேப்பிலை
சிறிதுகொத்தமல்லி
1/2 இன்ச் இஞ்சி
3 பற்கள் பூண்டு
2 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் சோம்பு
1/4 கப் varutha கடலை maavu
தேவையானஅளவு உப்பு
பொரிப்பதற்கு ஆயில்
செய்முறை
குக்கரில் சேனை கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் மசித்த சேனை கிழங்கு, வெங்காயம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், கரம் மசாலா, சோம்பு, கடலை மாவு, உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்.பின்பு அவற்றை வடை போன்று தட்டி வைத்துக் கொள்ளவும்.கடாயில் ஆயில் ஊற்றி சூடானவுடன் மிதமான தீயில் வைத்து பொறிக்க வேண்டும்.மழை காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவாக இருக்கும்.