புழல்: செங்குன்றம் அன்னை தெரசா அன்பு சேவை அறக்கட்டளை சார்பில் அன்னை தெரேசா பிறந்த நாளை முன்னிட்டு செங்குன்றம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் போர்வை வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனர் திராவிட டில்லி தலைமை தாங்கினார். கிரான்ட் லைன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நா.ஜெகதீசன், செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், வடகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், சமூக ஆர்வலர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளராக செங்குன்றம் போலீஸ் சரக உதவி ஆணையர் ராஜா ராபர்ட் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் போர்வைகள் வழங்கினார். இதில் சமூக ஆர்வலர்கள் பிரேம்குமார், சதீஷ்குமார், சூர்யா, செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் செங்குன்றம் அடுத்த அஞ்சிவாக்கம் ஊராட்சி அலுவலகம் வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா கல்விநாதன், வழக்கறிஞர்கள் அறிவுநிதி, அப்துல் சமத், செங்குன்றம் பாலா, செல்வகுமார் கண்ணம்பாளையம் அப்பு சென்றம்பாக்கம் லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.