ஐதராபாத்: ஒன்பது முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 81. அவர் சுவாசம் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் 1 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆச்சார்யா தனது மனைவி மரணத்திற்கு பின் ஐதராபாத்தில் தங்கியிருந்தார். அவரது உடல் மே.வங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.