சென்னை: சந்திரயான் – 3 வெற்றி என்பது இஸ்ரோவின் மதிப்பை மட்டுமின்றி, இந்தியர்களின் மதிப்பை உயர்த்தியுள்ளதாக மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் பேசியதாவது: இந்தியர்கள் அனைவரும் பெருமை பட கூடிய தருணம் இது. உலக நாடுகளில் இஸ்ரோவின் மதிப்பை சந்திரயான் – 3 வெற்றி உயர்த்தியுள்ளதாக நினைப்பதை விட, இதனை ஒவ்வொரு இந்தியர்களின் மதிப்பையும் உயர்த்தியுள்ளதாக தான் கருத வேண்டும்.
இளைஞர்களின் உந்துவிசையாக இவை இருக்கும். ஏனெனில், அவர்கள் வாழ்க்கையில் கடினமாக படித்து இதுபோன்ற விஞ்ஞானிகளாக வெண்டும் என்ற எண்ணம் தோன்றும். எனவே, இந்த வெற்றியை அனைவரும் கொண்டாட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.