சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: மூத்த செய்தியாளரும், சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினருமான ஏ.பி.மோகன் (66) தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக நேற்று சென்னையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். ஏ.பி.மோகன் செய்தியாளராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்.
அனைவரிடமும் நல்ல பண்புடனும், அன்புடனும் பழகும் இனிய பண்பாளர். இவரது பத்திரிகைத் துறையின் பணி அனைவராலும் பாராட்டுக்குரியது என்பதை நினைவு கூர்கிறேன். மறைந்த மூத்த பத்திரிகையாளர் ஏ.பி.மோகன் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.